பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையில் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் உள்ள சதோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment