அத்துரலிய ரத்தின தேரரின் கோரிக்கைகளில் இரண்டை இலங்கை அரசு நிறைவேற்றியமையைப் பாராட்டுகிறேன் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணச் சைவத் தமிழ் மக்களின் நெடு நாள் கோரிக்கையை நிறைவேற்றிய இலங்கை அரசைப் பாராட்டுகிறேன்.
மேதகு குடியரசுத் தலைவரின் பணியை எளிதாக்கிக் கொப்பளிக்கும் உணர்ச்சிகளுக்கு அணை கட்டினார்கள். மேதகு ஆளுநர்களாக இருந்த அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா இருவரும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் நடவடிக்கையாகத் தங்கள் பதவிகளை விட்டுக் கொடுத்ததைப் பாராட்டுகிறேன்.
வணக்கத்துக்குரிய அத்துரலிய ரத்தின தேரரின் எஞ்சிய கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிறைவேற்றி மீண்டும் வளர்ச்சிப் பாதையில் மக்களைத் திசை திருப்பிச் செல்வமும் செழிப்பும் மிக்க நாடாக இலங்கையை மாற்றி இனங்களுக்கிடையே நல்லுறவும் நல்லிணக்கமும் அன்பும் அருளும் அறனும் நிலைக்க வேண்டுகிறேன் - என்றார்.
0 comments:
Post a Comment