தேசிய பொசன் வாரம் இன்று (12ஆம் திகதி) ஆரம்பமாகின்ற நிலையில், அநுராதபுரத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொசன் வாரத்தை முன்னிட்டு வீடுகளிலும் நிறுவனங்களிலும் பௌத்த கொடியைப் பறக்கவிடுமாறு பொதுமக்களிடம் மாகாண சபைகள் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம், பொசன் வாரத்தை முன்னிட்டு நாளை 13ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அனுராதபுரம் மாவட்டத்தில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்தோடு, குறித்த காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்வதற்கான விசேட சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment