சிங்கங்கள் சீறிப் பாய்ந்தால் ஒட்டகங்களுக்கு ஓடி ஒளிய வேண்டிய நிலையே ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அத்துரலிய ரதன தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும் கூறுகையில், 21/4 தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
எனினும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளை இந்த அரசாங்கம் பாதுகாத்து வருகின்றது. இதனால் இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுக்க வேண்டிவருமோ தெரியவில்லை.
எனவே, அடிப்படைவாதிகளை பாதுகாக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும்.
குறிப்பாக சிங்கங்கள் எழுச்சி கொண்டால் ஒட்டகங்களுக்கும், அவற்றை பாதுகாக்கும் குள்ளநரிகளுக்கும் ஓடி ஒளிவதற்கு இடம் தேட வேண்டிய நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையை விடுக்க விரும்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment