மின்சாரம் தாக்கியதில் முதியவர் ஒருவர் உட்பட மூவர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அகுரெஸ்ஸ - தலஹகம - கொனகமுல்லை பிரதேசத்தில் நடந்துள்ளது.
அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின்சார இணைப்பில் சிக்கியே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
45 , 56 மற்றும் 76 வயதுடைய தலஹகம பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment