மரம் வெட்டும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
சுற்றாடலுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த இயந்திரங்களை இறக்குமதி செய்வது முற்றாக தடை செய்யப்படவுள்ளது.
மரம் வெட்டும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment