முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தங்களால் பொலிஸ் தலைமையகத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான கோப்பு மாயமாகியுள்ளதாக இராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த கோப்பு, ரிஷாட் பதியுதீனுக்கு மறைமுகமாக வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த அமைப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் நேற்று முறைப்பாடளித்ததைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே. குறித்த அமைப்பின் தலைவர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சில முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு உதவிகளை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய கோப்புக்களை நாம் பொலிஸ் தலைமையகத்திற்கு வழங்கியிருந்தோம். பிரதி பொலிஸ் மா அதிபர் அலககோனிடம்தான் இதனை வழங்கியிருந்தோம்.
எனினும், தற்போது நாம் வழங்கிய கோப்புக்கள் மாயமாகியுள்ளன. எமக்கு இதுகுறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இங்கிருந்து இந்த குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கிய கோப்புக்கள் ரிஷாட் பதியுதீனுக்கு மீண்டும் வழங்கப்பட்டிருக்குமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் ஆராயப்பட வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment