கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில், நோன்பு திறக்கும் இப்தார் விசேட நிகழ்வொன்று நேற்று கிளிநொச்சி, நாச்சிக்குடா அல் ஹிக்மா மக்தப் பள்ளிவாயலில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி இராணுவ தலைமைக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், படைப்பிரிவு உயரதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் வருடம் தோறும் இப்தார் நிகழ்ச்சியொன்று நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments:
Post a Comment