தம்புள்ள, ரஜமஹா விகாரையின் விகாரதிபதி அம்பகஹவெவ ராகுல தேரரை மிரட்டி 10 கோடி ரூபா பணத்தை பெற்றுக் கொள்ள முற்பட்டதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பகஹவெவ ராகுல தேரரிடம் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி ஜவாத் எனும் அமைப்பின் பெயரில் மிரட்டல் அழைப்பு ஒன்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் தேரர் இது தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்ட 3 தொலைபேசிகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
19 வயதுடைய சானக பிரசாத் கருணாரத்ன, 25 வயதுடைய அதுல ஜயசாந்த மற்றும் 34 வயதுடைய மிஹிது குணரத்ன என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தம்புள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment