கண்டி – தவுலகல – பங்கலாவத்த பகுதியில் கற்பாறை மீதிருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவை மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது 127 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட சில வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து இதுவரையில் எந்தவொரு சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment