உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதிலும் ஜனாதிபதியின் கோரிக்கையினை தெரிவுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெரிவுக்குழு உறுப்பினர்களுடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனாலும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தொடர்பிலும் தெரிவுக்குழுவில் தற்போது ஆராயப்படுவதால் அவரை சந்தித்துப் பேசுவதை தவிர்ப்பது நல்லது என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
நேற்றைய தினம் தெரிவுக்குழு விசாரணை ஆராம்பமாவதற்கு முன்னர் ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கை குறித்து விரிவாக ஆராயப்பட்டபோதிலும் ஜனாதிபதியுடன் சந்திப்பினை தவிர்ப்பது நல்லது என பல உறுப்பினர்களும் கருத்து தெரிவித்தமையினால் ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கேற்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment