ஆப்கானிஸ்தானிடம் போராடி வென்ற இந்தியா

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் வளர்ந்துவரும் அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கடைசி வரை போராடி வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில் நடைபெறும் 12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்கு தெரிவாகும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Southampton நேற்று இடம்பெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக புவனேஷ்வர்குமாருக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுபபெடுத்தாடியது . நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
225 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 213 மாத்திரமே பெற்றுக்கொண்டது.
போட்டியின் கடைசி 3 ஓவர்களில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு 24 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 48 ஆவது ஓவரில் முகமது ஷமி 3 ஓட்டங்களையும், 49-வது ஓவரில் பும்ரா 5 ஓட்டங்களிலும் விட்டுக்களை எடுத்து கட்டுப்படுத்தினர்.
இதனால் கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வீசினார். முகமது நபி பவுண்டரி அடித்து இந்திய ரசிகர்களை திகிலடையச் செய்தார். அடுத்த பந்தில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காத வீரர்; முகமது நபி (52 ஓட்டங்கள், 55 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) 3ஆவது பந்தை தூக்கியடித்து பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அப்தாப் ஆலம், முஜீப் ரகுமான் இருவரும் முகமது ஷமியின் அடுத்தடுத்த பந்துகளில் கிளின் போல்டு ஆனார்கள். முகமது ஷமியின் ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாதனையோடு இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.
இந்த தொடரில் 5 ஆ-வது போட்டியை எதிர்கொண்ட இந்திய அணிக்கு இது 4 ஆவது வெற்றியாகும். ஆப்கானிஸ்தான் அணிக்கு இந்தத்தொடரில் 6ஆவது தோல்வியாகும். பும்ரா ஆட்டநாயகனாக தெரிவானார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment