புதிதாக அமைக்கப்பட்ட முல்லைத்தீவு அளம்பில் அந்தோனியார் ஆலயம் யாழ். ஆயரால் திறந்து வைக்கப்பட்டது.
போரால் மிகவும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு அளம்பில் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலயமே இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பி.ஞானப்பிரகாசத்தினால் இந்த ஆலயம் திறந்துவைக்கப்பட்டது. இந்த திறப்புவிழா இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்றது.
ஆலயம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ். மறைமாவட்ட ஆயரால் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்த திறப்புவிழா நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, கரைதுறைப்பற்று செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment