உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் சம்பவங்களை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இன்றைய அமர்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சமூகமளித்து சாட்சியளிக்கவுள்ளார்.
அதேவேளை முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன், பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரும் இன்று தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற தெரிவுக்குழு அமர்வில் முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அசாத்சாலி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ரிஸ்வி முப்தி, காத்தான்குடி பள்ளிவாசல் மற்றும் இஸ்லாம் சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி அப்துல் உவைஸ் ஆகியோர் சாட்சியமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment