உலங்கு வானூர்தி மூலமாக நடைபெற்ற மீட்பு நடவடிக்கையின்போது, அபயம் கோரிய மூதாட்டி படுக்க வைக்கப்பட்டிருந்த மீட்புக்கூடை திடீரென காற்றின் வேகத்தில் சுழல ஆரம்பித்தது.
இதனால் அந்தப் பெண்மணி கடும் அவதிக்கு ஆளானார் இந்தச் சம்பவம் அமெரிக்காவில், அரிசோனா மாகாணத்தின் தலைநகரான பீனிக்ஸ் பகுதியில் நடந்துள்ளது.
பீனிக்ஸ் அருகே, பீஸ்டீவா(Piestewa) மலைப்பகுதி உள்ளது. இங்கு, 75 வயதான பெண்மணி ஒருவர், சிக்கித் தவித்தார். இதையடுத்து உலங்கு வானூர்தியில் அங்கு விரைந்த மீட்புப்படையினர், அந்த மூதாட்டியை மீட்டு, செவ்வக வடிவிலான மீட்புக்கூடையில் கிடத்தி, மேலே தூக்கினர்.
அப்போது, உலங்கு வானூர்தியின் காற்றாடியிலிருந்து ஏற்பட்ட காற்றின் வேகத்தால், அந்த மீட்புக்கூடை சுற்றிச்சுழல ஆரம்பித்தது.
மீட்புக்கூடை, கிறு,கிறுவென சுற்றியதால், அந்த மூதாட்டிக்கு, தலைச்சுற்றலும், குமட்டலும் ஏற்பட்டதாக, மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment