பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜப்பானில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
சமீபத்தில் 19 வயது மகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய தந்தையை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளமை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜப்பானின் ஒன்பது நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ள பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டங்களில் சீர்திருத்தங்களை கோரியுள்ளனர்.
பூக்களையும் மீடு- யூடு போன்ற பதாகைகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இவர்கள் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
ஜப்பானின் சட்டங்கள் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கடும் அழுத்தங்களை திணிக்கின்றன என தெரிவித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போதைய சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் தற்போதைய சட்டங்களை கைவிடுமாறும் கோரியுள்ளனர்.
நாங்கள் பாலியல்வன்முறைகளிற்கு தொடர்ந்தும் எங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வந்தால்,ஜப்பானின் தற்போதைய நியாயமற்ற சட்டம் நீக்கப்படும் என மிசா இவாட்டா என்பவர் தெரிவித்துள்ளார்.
நான் 16 வயதில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் குரல்களை கூட்டாக வெளிப்படுத்தினால் சமூகமும் அரசியலும் மாற்றமடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment