ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ’தர்பார்’ திரைப்படத்தில் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகர் பில் டியூக் வாய்ப்பு கேட்டு டுவிட் செய்துள்ளார். அவர் தனது டுவிட்டில், ’முருகதாஸ், எனக்கு தமிழ் பேச தெரியாது.
ஆனால் ரஜினியின் நீண்ட கால நண்பனாகவோ, அமெரிக்க உறவினராகவோ, நயன்தாராவின் அங்கிளாகவோ நான் நடிக்க முடியும் என நினைக்கிறேன். ஸ்ரீகர் பிரசாத், சந்தோஷ் சிவன் என்னை எடிட் செய்யலாம், அனிருத் எனக்கு ஒரு ஹிட் சாங் கொடுக்க முடியும், நீங்கள் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசிடம் வாய்ப்பு கேட்டுள்ளார்.
பில் டியூக்கின் இந்த டுவிட்டை நம்ப முடியாத முருகதாஸ், ‘சார் இது நிஜமாவே நீங்க தானா?’ என்று கேட்டார். அதற்கு ‘ஆமாம் சார். நானும் எனது அணியும் உங்கள் வேலையின் தீவிர ரசிகர்கள். எனக்கு இப்போது 76 வயதாகிறது. நிக்கோலஸ் கேஜுடன் ‘தி மூவி மேண்டி’ படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் இணைந்து பணியாற்றலாம்’ என பில் டியூக் கூறியுள்ளார்.
இவர் ஏற்கனவே, மகேஷ்பாபுவின் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின்போது, ‘ஒரு சர்வதேச ஸ்பை திரில்லர் படத்தில் இணைந்து பணியாற்றலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் வரும்போது சொல்லுங்கள், சேர்ந்து உணவு சாப்பிடலாம்’ எனக் கூறியிருந்தார்.
0 comments:
Post a Comment