முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி மாட்டு வண்டி சவாரி திடலில் மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி நேற்று மாலை இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட மாட்டுவண்டிச் சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போட்டி ஐந்து பிரிவுகளாக இடம்பெற்றது. இதில் 48 மாட்டுவண்டிகள் பங்குபற்றியிருந்தன.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக இந்த மாட்டு வண்டி சவாரி காணப்படுவதோடு இந்த பாரம்பரியங்கள் அழிந்து செல்லாது இருப்பதற்காக தொடர்ச்சியாக இவ்வாறான போட்டிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் வள்ளுவர் புரத்தைச் சேர்ந்த கிதுவிசன், புளியம்பொக்கணையை சேர்ந்த அம்மன், வட்டக்கட்சியைச் சேர்ந்த கிருபா, கண்சனா மற்றும் சர்சனா ஆகியோரின் மாட்டு வண்டிகளே முதலிடங்களைப் பெற்றுக் கொண்டது.
பிரிவு ரீதியாக வெற்றியீட்டியவர்களுக்கு மாட்டு வண்டி சவாரி சங்கத்தால் பரிசில்கள் வழங்கப்பட்டது. பரிசில்களை முல்லைத்தீவு மாவட்ட மாட்டுவண்டி சவாரி சங்கத் தலைவர் த.ராஜேஷ்கண்ணா, கிளிநொச்சி மாவட்ட மாட்டுவண்டி சவாரி சங்கத் தலைவர் சி தணிகாசலம், முல்லைத்தீவு மாவட்ட மாட்டுவண்டி சவாரி சங்க உபதலைவர் கே விக்னேஷ் ஆகியோர் வழங்கி கெளரவித்தனர்.
0 comments:
Post a Comment