மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிருப்பு சந்தியில் நேற்று மாலை நடந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்து மற்றயவர் மன்னார் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பேசாலை முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் நேற்றை தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய எ.அசோக்குமார் (வயது-25) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
மன்னாரிலிருந்து தலைமன்னார் வீதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரும், பிரிதொரு நபரும் அதே வீதியூடாக மன்னார் நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனத்துடன் புதுக்குடியிருப்பு பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment