சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனத்தில் புதிய திருப்பம்

யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக தற்போதய யாழ் போதனா மருத்துவப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி  மத்திய சுகாதார அமைச்சின் செயலரினால் நியமிக்கப்பட்டிருந்தார். 

இந்த நியமனம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகம்  மருத்துவர் சத்தியமூர்த்தியை யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகத் தொடர முடியாதென்றும் முன்னைய நிர்வாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தங்களது இந்த நியமனம் சரியானதென்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக மருத்துவர் சத்தியமூர்த்தி  தொடர்வார் எனவும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

அரசமைப்பின்படியும் மருத்துவர்களுக்கான சேவைப்பிரமாண குறிப்பின் படியும் அண்மையில் வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட சுகாதார நியதிச்சட்டத்தின் அடிப்படையிலும் மருத்துவர்களுக்கான நியமனம் மத்திய அமைச்சுக்குரியதென்றும் தெரியப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் தான் பதவியேற்று குறுகிய காலத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்திய மருத்துவர் சத்தியமூர்த்தியின் சேவை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தொடரும் என்ற செய்தியை அறிந்து மருத்துவர்களும் சுகாதார உத்தியோகத்தர்களும் மக்களும் மகிழ்சியிலுள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment