வனவிலங்கு பூங்காவிலிருந்து தப்பித்த 14 சிங்கங்கள், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உலவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னெஸ்பெர்க் நகரிலுள்ள க்ருகர் தேசிய பூங்காவிலிருந்து தப்பித்த இந்த சிங்கங்களை தேடும் பணிகளில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தேசிய பூங்கா அருகிலுள்ள பாஸ்கர் பாஸ்பேட் சுரங்கத்திற்கு அருகில் சிங்கங்கள் சுற்றி திரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் பூங்காவின் செய்தி தொடர்பாளர், சிங்கங்கள் தப்பிப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், பெரிய சிங்கங்களால் அவை விரட்டப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சிங்கங்களின் நடமாட்டம் இருப்பதாக தெரிய வந்தால் வனத்துறைக்கு தகவல் அளிக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment