போர்க்காலத்தில் நடந்த இழப்புக்களை மூடி மறைக்க சிங்கள அரசியல்வாதிகள் ஒன்றுமையாக செயற்பட்டு வருவதாக வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும், இழப்புக்களின் உண்மையான தரவுகளை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
யாழில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “எவ்வாறு ஒரு பிரச்சினையென்று வரும்போது முஸ்லிம் தலைவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டார்களோ, அவ்வாறே போர்க்காலத்தில் நடந்த இழப்புக்களை மூடி மறைக்க சிங்கள அரசியல்வாதிகள் ஒன்றுமையாக செயற்பட்டு வருவகின்றனர்.
மேலும் எம்மில் சிலர் தமது பிரத்யேக நலனுக்காக பேரினவாதிகளுடன் இணைந்து செயற்படுகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment