கணவன் கத்திக்குத்தில் மனைவி சாவு ; யாழ் குருநகரில் கொடூரம்

கணவனின் கத்திக்குத்தில் படுகாயமடைந்த மனைவி  மருத்துவமனையில், சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் இடம்பெற்றது.

கணவரால் 12 இடங்களில் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி நேற்று யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் கழுத்து, நெஞ்சு என 12 இடங்களில் கத்திக்குத்து ஆழமாகப் பதிந்திருந்ததால் அதிகளவு குருதி வெளியேறி உயிரிழந்தார் என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

இவ்வாறு உயிரிழந்தவர் 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் என்று தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத்தகராறு காரணமாக மனைவி மீது கணவன் இந்தக் கொடூரத்தைப் புரிந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. சம்பவத்தையடுத்து கணவர் தலைமறைவாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment