மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கொடூரமாக தாக்கினர்.
இதைக் கண்டித்து கடந்த 12-ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ளது.
இதையடுத்து, அங்குள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தனர்.
மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, தங்களது 6 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என டாக்டர்கள் அறிவித்து உள்ளனர்.
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்க மறுத்த டாக்டர்கள், மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி விடுத்த அழைப்பை நிராகரித்துள்ள அரசு மருத்துவர்கள், மம்தா பானர்ஜி முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
0 comments:
Post a Comment