இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச்சம்பவம் அனுராதபுரம் - தலாவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றது.
தலாவ - மொரகொட - சுனாமி சந்தி பகுதியில் வானும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மேலும் 03 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் பாரவூர்தியின் சாரதி மற்றும் இரு உதவியாளர்கள் காயமடைந்துள்ளதுடன் இவர்கள் கல்நேவ பிரதேசத்தை சேர்ந்த பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment