தர்பார் செட்டில் ரஜினிகாந்த் தனது பேரன் வேத் கிருஷ்ணாவுடன் இருக்கும் புகைப்படத்தை சந்தோஷ் சிவன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஒரு ரஜினி தாதா என்றும், மற்றொரு ரஜினி போலீஸ் அதிகாரி என்றும் செய்திகள் வெளியாகின.
இருப்பினும் எந்த தகவலையும் முருகதாஸ் இதுவரை உறுதி செய்யவில்லை.
தர்பார் படப்படிப்பில் மேக்கப் எல்லாம் போட்ட பிறகு ரஜினிகாந்த் தனது இளைய மகள் சவுந்தர்யாவின் மகன் வேத் கிருஷ்ணாவுடன் சேர்ந்து மானிட்டரை பார்த்துள்ளார்.
அப்பொழுது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தாத்தாவையும், பேரனையும் புகைப்படம் எடுத்துள்ளார். என் ஐபோனில் உள்ள கேன்டிட் புகைப்படங்கள் இவை மட்டுமே என்று கூறி அந்த புகைப்படங்களை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஒரு தாத்தா தனது பேரனை தூக்கி வைத்திருப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் ரஜினி இப்படி தனது பேரனுடன் இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாவது இல்லை. சந்தோஷ் சிவன் மாதிரி யாராவது புகைப்படம் எடுத்து வெளியிட்டால் தான் உண்டு. இந்நிலையில் சந்தோஷ் சிவன் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவருக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.
சந்தோஷ் சிவன் வெளியிட்ட புகைப்படங்களில் ரஜினி முன்பு இளமையாக இருந்தபோது பார்த்தது போன்றே உள்ளது என்கிறார்கள் ரசிகர்கள். ரசிகர் ஒருவரோ இயக்குநர் ஷங்கர் தனது படங்களில் ரஜினிக்கு சரியாக மேக்கப் போடாமல் லுக்கை கெடுத்துவிட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார். ரஜினி ரசிகரின் இந்த குற்றச்சாட்டை பார்த்த மற்றொரு ரசிகர்கள் ஷங்கரை குறை சொல்ல வேண்டாம், அவர் படங்களில் ரஜினிக்கு மெனக்கெட்டு மேக்கப் போட்டுள்ளார் என்று பரிந்து பேசியுள்ளனர்
0 comments:
Post a Comment