தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை இனவாதிகளுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடக்கிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், சிவமோகன் தெரிவித்தார்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு என்றும் ஆதரவு வழங்கியதில்லை என்றும் அவர் கூறினார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இனப் பிரச்சினைக்கான தீர்வு முடக்கப்பட்டுவிட்டது. இனவாதிகளால் பின்தள்ளப்பட்டு பின்னர் இனவாதிகளுடன் ஒன்று சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை முடக்கிவிட்டார்.
இந்த அரசுக்கு நாம் ஆதரவானவர்கள் அல்லர். ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரானவர்களை அரசாட்சிக்கு கொண்டுவராமல் தடுப்பதற்கான நடவடிக்கையையே நாம் முன்னெடுக்கின்றோம்” என மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment