மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் சிறு குற்றத்தடுப்பு பிரிவுக் கட்டட கூரை மின்விசிறி உடைந்து கீழே விழுந்ததில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று காலையில் இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் சம்பவதினமான நேற்று காலை 10.30 மணியளவில் குறித்த பிரிவில், இயங்கி கொண்டிருந்த கூரை மின்விசிறி திடீரென உடைந்து வீழ்ந்தததையடுத்து அங்கிருந்த பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
குறித்த மின்விசிறியின் ஆணி கழன்றதாலேயே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment