அரச அலுவலர்கள் மனிதநேயத்துடன் சேவையாற்ற வேண்டும் - ஆளுநர் ராகவன்

வடமாகாண அரச அலுவலர்கள் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய விதத்திலும் மனிதாபிமானத்துடனும் சேவை செய்ய வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்.

யாழ் நூலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற கொள்முதல் நடைமுறை மற்றும் ஒப்பந்த நிர்வாக பாடநெறியை  (CIPPCA 2018/2019) பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது, 

நீங்கள் கற்றுக்கொண்ட  இந்த விடயங்கள் வெறுமனே ஒரு காரியாலயத்தின் அடிப்படையாக மட்டுமல்ல . ஒரு நாகரீகத்தின் சமிக்ஞையாக இருக்கவேண்டும்.

எந்த மாதிரியான சமுதாயத்தை  உருவாக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அது உங்களுக்கும் உங்கள் நாகரீகத்திற்கும் உங்களைப் பயிற்றுவித்த ஆசானுக்கும், அடிப்படையாக உங்கள் மனசாட்சிக்கும் மத்தியிலே உள்ள ஒரு கேள்வி. 

என்னுடைய பிரார்த்தனை எல்லாமே நீங்கள் நல்ல ஒரு நாகரீகத்தின் பயணத்திற்கு அடிப்படையாக இருப்பீர்களென எதிர்பார்க்கிறேன். -என்றார்.










Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment