ஜனாதிபதியின் ஆணையை மீறி தெரிவுக்குழு கூடுமா!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவினை மீறி நாளை மீண்டும் தெரிவுக்குழு கூடுமாக இருந்தால் அது நிறைவேற்று அதிகாரத்தை பலமற்ற ஒன்றாக மாற்றும் செயற்பாடென சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு கூட்டம் குறித்து நேற்று   ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே துமிந்த திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார். 
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“புலனாய்வு பிரிவினர் கூறும் விடயங்களை ஊடகங்களுக்கு நேரடியாக தெரிவிப்பது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமென்பதை சபாநாயகர் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்கா உளவு பிரிவு அதிகாரிகள் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்ததாக சபாநாயகர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன. ஆனால் அவர்கள் சாட்சியமளிக்கும்போது அதனை ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்ததா என்ற கேள்வி எழுகின்றது.
ஆகையால் சர்வதேச நாடுகளை, எல்லா விடயங்களுக்கும் காரணம் காட்டுவதனை விடுத்து, இலங்கையின் பாதுகாப்பு குறித்தே அனைவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் நாட்டின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை மக்களின் செல்வாக்கினை பெற்ற ஒருவர் மைத்திரிபால சிறிசேன ஆவார். ஆகையால் அவரே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிடுவதற்கு தகுதியுடையவர்” என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment