வாக்காளர் பட்டியலை விநியோகம் செய்யும் கிராம சேவகர்கள் அதனோடு இணைத்து பொலிசாரால் தகவல் திரட்டும் விண்ணப்பத்தை இணைத்து வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ண ஜீவன் எச் ஹூல் தெரிவித்தார்.
நாட்டில் யூன் மாதம் வாக்காளர் பதிவு மாதம் என்பதனால் அதன் பிரகாரம் வாக்காளர் விபரப் படிவங்கள் கிராம சேவகர்கள் மூலம் இல்லங்கள் தோறும் விநியோகித்து விபரங்கள் பெறப்படுகின்றன. அவ்வாறு விநியோகிக்கப்படும் படிவங்களுடன் இணைத்து பொலிசார் தகவல் பெறும் ஓர் சிறிய படிவத்தினையும் இணைத்து கிராம சேவகர்கள் விநியோகம் செய்வதாக பலரும் முறையிடுகின்றனர்.
உண்மையில் வாக்காளர் படிவம் மட்டுமே தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட படிவம் பொலிசார் தகவல் திரட்டும் படிவத்திற்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது. அதனை கிராம சேவகர்களும் பொலிசாருமே பொறுப்புக்கூற வேண்டும். அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு எந்தக் காலத்திலும் பொறுப்புக்கூற மாட்டாது.
பொலிசாரின் படிவம் தொடர்பில் மக்களே முடிவினை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு இரு படிவமும் இணைத்து வழங்கப்படுவதாக முன்பும் முறையிடப்பட்டுள்ளது சமயம் அதனை கிராம சேவகர்கள் மறெத்திருந்தனர். தற்போது மீண்டும் அதே முறைப்பாடு தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஆணைக்குழுவில் விசேட கவனம் செலுத்தப்படும். என்றார்.
குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது.
வாக்காளர் பட்டியலே தேர்தல்கள் சட்டப்படி விநியோகம் செய்யும் படிவம் . அதேநேரம் பொலிசாரின் படிவம் அது பொலிசார் கிராம சேவகர் ஊடாக விபரம் கோரும் படிவம் இரண்டிற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதேநேரம் இரு படிவங்களையும் ஒன்றாக இணைத்து அனைத்தும் ஒரே காரணத்திற்கானது என கிராம சேவகர்கள் கோரவும் முடியாது. இரண்டினையும் தனியாக மேற்கொள்ளுமாறு சகல கிராம சேவகர்களிற்கும் உடன்னியாக அறிவுறுத்தப்படும். எனத் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment