விக்கிலீக்ஸ் தலைவரான ஜூலியன் அசாஞ்சை தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா முறைப்படி கோரிக்கை வைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசின் இரகசிய தகவல்கள், இரகசிய ஆவணங்களை வெளியிட்டது மற்றும் அமெரிக்காவின் முன்னாள் இராணுவ வீராங்கனை செல்சியா மனிங்குடன் சேர்ந்து பாதுகாப்பு துறையின் கணினியை முடக்க முற்பட்டது போன்ற 18 வகையான குற்றச்சாட்டுகள் விக்கிலீக்ஸ் தலைவர் ஜூலியன் அசாஞ்ச் மீது சுமத்தப்பட்டுள்ளன. மேலும் உளவு பார்த்ததற்கான குற்றச்சாட்டும் அலெக்சாண்ட்ரியா மத்திய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், லண்டனில் உள்ள ஈகுவடோர் தூதரகம், கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, ஜூலியன் அசாஞ்சுக்கு 2012ஆம் ஆண்டு அடைக்கலம் அளித்தது.
எனினும் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி அவருக்கு அளித்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டதையடுத்து, ஈகுவடோர் தூதரகத்திற்குள்ளே சென்று பிரித்தானிய பொலிஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment