இப்தார் விருந்தில் பாகிஸ்தான் வன்முறையில் ஈடுபட்டமைக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனத்தை இன்று வெளியிட்டுள்ளது.
ரமழான் நோன்பினை முன்னிட்டு பாகிஸ்தான், இஸ்லாமாபாத் நகரிலுள்ள செரீனா ஓட்டலில் இந்திய தூதரகம் சார்பில் இப்தார் விருந்து நேற்று அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பினர் குறித்த ஹோட்டலை முற்றுகையிட்டு அங்கு வந்திருந்தவர்களை துன்புறுத்தி அவமரியாதை செய்தமையினால் பெரும்பாலானோர் திரும்பி சென்றுள்ளனர்.
இந்நிலையிலேயே பாகிஸ்தானின் அத்துமீறிய செயலுக்கு இந்திய தூதரகம், கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து பாகிஸ்தானுக்கான இந்திய தூதுவர் அஜய் பிசாரியா தெரிவித்துள்ளதாவது, “தூதரக நடத்தைகளுக்கான அடிப்படை விதிகளை மீறி செயல்பட்டுள்ளனர்.
மேலும் நாகரீக அணுகு முறையிலிருந்தும் விலகி இருதரப்பு உறவுகளுக்கு எதிராக பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பினர் நடந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை இப்தார் விருந்து நிகழ்ச்சியில், கடுமையான முறையில் வெளியேற்றப்பட்ட விருந்தினர்கள் அனைவரிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுகொள்கிறோம்” என அஜய் பிசாரியா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment