ரயில்வே ஊழியர்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நேற்று (22ஆம் திகதி) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இன்று (23ஆம் திகதி) அதிகாலை முதல் ரயில்சேவைகளை வழமைபோன்று முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நள்ளிரவு 12 மணி முதல் வௌ்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment