அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடவுள்ளது.
அதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இன்று நாடாளுமன்றம் கூட்டவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக குறித்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment