முல்லைத்தீவு மாங்குளம் கிராம அலுவலர் வளாகத்தில் குடிதண்ணீர் சுத்திகரிப்பு தொகுதி ஒன்றுக்கு அடிக்கல் நடப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தினுடைய விசேட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக 5 லட்சம் ரூபா பெறுமதியில் குடிதண்ணீர் சுத்திகரிப்பு தொகுதி அமைக்கப்படவுள்ளது.
நிகழ்வில், மாங்குளம் கிராம அலுவலர் த.தனபால்ராஜ் , ஜனாதிபதி செயலகத்தின் உதவிச் செயலர் லலித் பண்டார, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் த அகிலன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான மு முகுந்தகஜன், ச சத்தியசுதர்சன் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராம மக்கள் கிராமத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment