ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய முன்னெடுக்கப்படும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரம் இன்று ஆரம்பமாகிறது.
இன்று தொடக்கம் எதிர்வரும் முதலாம் திகதிவரை பல்வேறு போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் 26ஆம்திகதி அனுஷ்டிக்கப்படும் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தல்களுக்கு எதிரான சர்வதேச தினத்தை அடிப்படையாகக்கொண்டு தேசிய போதைப்பொருள்வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் நாடளாவியரீதியாக ஒன்பது பிரதான வேலைத்திட்டங்கள ;மேற்கொள்ளப்படவுள்ளன. போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேலும்வலுப்படுத்துவதும் அனைத்து இலங்கையர்களும் இதற்காக ஒன்றிணைய வேண்டும் என்பதும் இதன் நோக்கமாகும்.
0 comments:
Post a Comment