கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மின்தூக்கி பழுதுபார்க்கும் ஊழியரை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அச்சுறுத்திய சம்பவம் குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் தொடுக்கப்பட்டுள்ள இந்த முறைப்பாடு தொடர்பிலேயே இவ்வாறு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை குறித்த ஊழியர் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment