தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கவே தான் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்ததாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,
நாம் முஸ்லிம் மக்களை மாத்திரம் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. ஆனால் முஸ்லிம் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதால், இந்த முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பதவி விலகுமாறு கோரமாட்டேன். அதேப்போல் பதவி விலக்கவும் மாட்டேன் என ஜனாதிபதி தம்மிடம் தெளிவாகக் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், எமக்கென்று பொறுப்புகள் உள்ளன. தேசிய ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஆசைப்படும் சகல இனங்களையும் சேர்ந்த 90 சதவீதமான மக்களுக்காகவே நாம் இந்த முடிவை எடுத்தோம் எனத் தெரிவித்துள்ளார்.
எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல்
முகவரிக்க அனுப்பிவையுங்கள்.
நன்றி
0 comments:
Post a Comment