இலங்கை அரசாங்கத்துக்கு 1 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா முன்வந்துள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை அமைக்கவே இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கடவத்த தொடக்கம் மீரிகம வரையான பகுதியை அமைப்பதற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியே (எக்சிம் வங்கி) இந்தக் கடனுதவியை வழங்கவுள்ளது.
இந்த திட்டத்துக்கு 1.1 பில்லியன் டொலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், 85 வீதத்தை சீனாவிடம் கடனாகப் பெறவும் 15 வீதத்தை உள்நாட்டு வங்கிகளிடம் அரசாங்கம் திரட்டவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாவது கட்டமாக, 37.09 கி.மீ தூரமுள்ள பகுதியை, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment