இராஜினாமா செய்துகொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை மீண்டும், பதவியில் இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பத்தேகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், “உண்மையில் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் சிங்கள மக்கள் ஒன்றிணைந்துள்ளார்கள். சிங்கள மக்களோடு, தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்துக்கொண்டுள்ளார்கள்.
இந்தநிலையில்தான் கடந்த வாரம் முஸ்லிம் தரப்பினர் மட்டும் தனியாக பிரிந்துள்ளார்கள். இது சரியான உதாரணமாக நாம் கருதவில்லை.
வெளியேறிய முஸ்லிம் அமைச்சர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். நல்லிணக்கத்தை நோக்கியதாகவே எமது பயணம் அமைந்திருக்கும். இதற்கான வேலைத்திட்டத்தையும் நாம் ஆரம்பித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment