இலங்கையில் இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்களின் பின்னரான பாதுகாப்பு கெடு பிடிகள் தொடர்பிலும் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது
இக் கலந்துரையாடல், மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தின் ஏற்பாட்டில் மன்னார் வவுனியா பிராந்திய இணைப்பாளர் M.R. பிரியதர்சன தமைமையில் இடம்பெற்றது
குண்டு வெடிப்பின் பின்னர் மன்னார் பகுதிகளில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் பாரதூரமானதும் மிக முக்கியமாக கருதப்படக் கூடியதுமான விடையங்கள் தொடர்பிலும் பேசப்பட்டது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக காணப்படுவதாகவும் அதிகளவிலான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு மக்கள் அநாகரிகமான முறையில் சோதிக்கப்படுவது தொடர்பிலும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment