தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் சந்தேகநபர் ஒருவரை விடுவிக்க ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றபோதே அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினரை பிணையில் விடுதலை செய்யுமாறு கூறி, இரண்டரை இலட்சம் ரூபாய் இலஞ்சம் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டில் அவர் கடந்த மாதம் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
ஐந்து இலட்சம் ரூபாயை இலஞ்சமாக வழங்குவதாக கூறியுள்ள குறித்த நபர், அதில் ஒரு தொகை பணத்தை உடனே வழங்குவதாகவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் விடுவிக்கப்பட்ட பின்னர் எஞ்சிய பணத்தை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment