தேர்தல்கள் ஆணைக்குழுவின் யாழ். மாவட்ட புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று நட்டு வைக்கப்பட்டது.
யாழ் பழைய பூங்கா அமைந்துள்ள புதிய அலுவலக அமைவிடத்தில் இன்று காலை 9.30 மணிக்கு அடிக்கல் நடப்பட்டது.
யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்டச் செயலர் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நட்டு வைத்தார்.
யாழ் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான ரட்ணஜீவன் கூல் , தேர்தல்கள் திணைக்களம் பணிப்பாளர், தேர்தல்கள் அலுவலக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment