நல்லிணக்கம் தோல்வியடைந்திருந்தால் நாட்டில் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று அடுத்த நாளே இரத்த ஆறு ஓடியிருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் நாட்டிற்குள் நல்லிணக்க முயற்சிகளின் வெற்றி தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது என தெரிவித்த பிரதமர் நல்லிணக்க முயற்சிகள் இந்த நாட்டில் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நல்லிணக்கத்திற்கும் தீவிரவாதத்திற்கும் இடையே தற்போது மோதல் உள்ளது. இந்நிலையில் எதிர்கால முடிவுகள் தொடர்பாக மதத் தலைவர்கள் மற்றும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் நாடு பல்வேறு சவால்களை சமாளித்துள்ளதாக தெரிவித்த பிரதமர் தற்போது புதிய சவால்களை எதிர்கொண்டு வருவதாகவும், இந்த சவால்களை மிக வெற்றிகரமான கையாண்டு அரசாங்கம் தீர்வை வழங்கும் என்றும் கூறினார்.
நாட்டில் தற்போது நல்லிணக்கம் வெற்றிபெறாவிட்டிருந்தால் ஏப்ரல் 22 ஆம் திகதி நாட்டில் ஒரு இரத்தக் ஆறு ஓடியிருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment