அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்பாடு செய்த பிரமாண்ட விருந்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கலந்து கொண்டார்.
அரசுமுறை பயணமாக மூன்று நாள் இங்கிலாந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோருக்கு, உற்சாக வரவேற்புடன் பக்கிங்காம் அரண்மனையில் மிகப்பெரிய விருந்தை அரச குடும்பத்தின் சார்பில் ராணி 2 ஆம் எலிசபெத் அளித்திருந்தார்.
இந்த நிலையில் இதற்குப் பதில் விருந்து அளிக்கும் வகையில், நட்பு ரீதியாக இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் டிரம்ப் மற்றும் மெலானியா ஆகியோர் நேற்று இரவு பிரமாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகியோரை அதிபர் டிரம்ப் வரவேற்று விருந்து நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் சென்றார். இந்த இரவு விருந்தில் இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே, அவரது கணவர் பிலிப் மற்றும் அரசு குடும்பத்தின் பிரபுக்கள் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment