சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் குறித்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நாளை(செவ்வாய்கிழமை) இந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி, மனிதவள அபிவிருத்தி மேற்பார்வை குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, சர்ச்சைக்குரிய குறித்த பல்கலைக்கழகத்திற்கு நிதி கிடைத்த விதம் மற்றும் அதன் நிர்மாணம் தொடர்பாக பாரிய பிரச்சினை நிலவுவதாகவும் அது குறித்து சவுதி அரேபிய அரசாங்கத்தை இணைத்து கொண்டு இராஜதந்திர ரீதியிலான விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என கல்வி, மனிதவள அபிவிருத்தி மேற்பார்வை குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment