சீனாவில் ரஜினி படத்திற்கு வந்த சிக்கல்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம் சீனாவில் 50 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.
ரஜினிகாந்த் நடித்த படம் சீனாவில் பிரமாண்டமாக ரிலீசாவது இது முதன்முறையாகும். கடந்த நவம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியான 2.0 திரைப்படம் 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
சீன மொழியில் ஒரே நேரத்தில் 50ஆயிரம் திரையரங்குகளில் வெளியாவதால் அங்கும் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சீனாவில் வெளியிட இருந்த நிறுவனம் தற்போது பின்வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் சீன மொழியில் வெளியான பேட்மேன் திரைப்படம், அங்கு எதிர்பார்த்த வசூலை பெறாமல் நஷ்டம் ஏற்படுத்தியது. 2.0 திரைப்படம் 25 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தால் மட்டுமே அந்த நிறுவனத்துக்கு லாபகரமாக அமையும்.
மேலும், ‘2.0’ வெளியாகும் சமயத்தில் தி லயன் கிங் படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதால், 2.0 வெளியீட்டை விநியோக நிறுவனம் தள்ளிப்போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment