ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய வவுணதீவு பிரதேச செயலகத்திலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமான விழிப்புணர்வு பேரணி வவுணதீவு சந்தி வரைச் சென்று, அங்கு போதைப்பொருள் பாவனையால் சமுதாயத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், வவுணதீவு உதவி பிரதேச செயலாளர் சுபா சுதாகரன், பிரதேச செயலக திட்ட உதவிப் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ், வவுணதீவு சுகாதார மேற்பார்வை அதிகாரி வீ.விஜயகுமார், வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக, கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால், ஜுன் 23ஆம் திகதி தொடக்கம் ஜுலை 01ஆம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment