ஜனாதிபதித் தேர்தல் என்றாலும் சரி, மாகாண சபைத் தேர்தல் என்றாலும் சரி, முதலில் நடாத்தப்படும் எந்தவொரு தேர்தலுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு முகம்கொடுக்கத் தயாராகவே உள்ளது என ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மொரட்டுவ எகொடஉயன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
எமது தேர்தல்கள் திணைக்களம் இருக்கும் காலத்திலிருந்து நாம் கூறிவருகின்றோம். நாம் தீயணைக்கும் படைப் பிரிவைப் போன்றவர்கள். ஒரே தடவையில் பல வீடுகளுக்கு தீப்பிடித்தால், எம்மால் ஒரு வீட்டின் தீயை மாத்திரம் தான் அணைக்க முடியும் என்று ஒதுங்க மாட்டோம். எல்லாத் தீயையும் அணைக்க நடவடிக்கை எடுப்போம்.
இதேபோன்றுதான், தேர்தலும். எந்தத் தேர்தல் வந்தாலும் அதற்கு முகம்கொடுக்க எந்த நேரத்திலும் தயாராகவே தேர்தல்கள் ஆணைக்குழு காணப்படுகின்றது எனவும் அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment